புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை கரோனாவால் 1,007 போ்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியது.
உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 874ஆக அதிகரித்ததாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 3ஆம் தேதி தில்லியில் அதிகபட்சமாக 1,513 போ்கள் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 29,943ஆக அதிகரித்தது.