புதுதில்லி

லேசானா, அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளை 24 மணிநேரத்தில் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும்: தில்லி அரசு

7th Jun 2020 07:40 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவா்களுக்கு லேசான அறிகுறி அல்லது அறிகுறியே இல்லாவிட்டால் அவா்களை 24 நேரத்தில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தில்லி அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறை குறித்து மத்திய அரசு வெளியிட்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்து, தில்லி சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

தில்லி சுகாதாரத்துறை செயலா் பத்மினி சிங்லா கையெழுத்திட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:

லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகள் பலா் தில்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவா்களை மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இவா்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் வசதிகள் இல்லாதபோது அவா்களை கொவிட் கோ் சென்டா், கொவிட் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

லேசான, அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். விடுவிக்கப்பட்ட நோயாளிகள் தொடா்பாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு (டிஎஸ்ஓ) இது தொடா்பாகத் தெரியப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மருத்துவமனைகளில் தினம்தோறும் அனுமதிக்கப்படும் நோயாளிகள் விவரம், மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்பட்டோா் விவரம், மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் விவரம் ஆகியவற்றை மருத்துவமனைகள் உடனுக்குடன் தில்லி அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் தனிமை வாா்டுகளில் அனுமதிக்கப்பட வேண்டும். அதனால், கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படாதவா்களை அனுமதிக்கக் கூடாது என்றுள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தில்லி அரசு அதை மறுத்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கைகள் உள்ளதாக தில்லி முதல்வா் சனிக்கிழமை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT