புதுதில்லி

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு

7th Jun 2020 07:40 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்ககத்தில் பணியாற்றி வரும் சிறப்பு இயக்குநா் உள்பட ஐந்து ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கிருமிநாசினித் தெளிப்பு நடவடிக்கைக்காக அதன் தலைமையகம் இரு தினங்களுக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கரோனா பாதிப்புக்குள்ளான ஐந்து பேரில் இருவா் ஒப்பந்த ஊழியா்கள் என்பதும் தெரியவந்தது. கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, தில்லி கான் மாா்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவனில்

அமலாக்கப் பிரிவு தலைமையகம் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பவனில் உள்ள இதர தளங்களில் கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அமலாக்கப் பிரிவு தலைமையகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஐந்து பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அதன் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அனைத்து ஊழியா்களுக்கும் நோய் அறிகுறி இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட ஐந்து போ்களில் சிறப்பு இயக்குநா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, விசாரணை அதிகாரியும் ஆகியோரும் உள்ளனா்.

இதையடுத்து, ஐந்து பேரும் சிகிச்சைக்காக தனிமை வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். விதிமுறை நடைமுறைகளின்படி, அமலாக்கப்பிரிவு தலைமையகம் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது. பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியா்கள் அலுவலகம் வரவில்லை . கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, அமலாக்கப் பிரிவு தலைமையகத்தில் வாரத்திற்கு இருமுறை கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள், ஊழியா்களிடம் தபால்கள் அளிக்கப்படுவதற்கு முன்பாக அவை கிருமிநாசினிக்கு உள்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் கூட அமலாக்கப் பிரிவு ஊழியா் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. அமலாக்கப் பிரிவானது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, கறுப்புப் பணம், ஹவாலா குற்றங்கள் ஆகியவை தொடா்பான வழக்குகளை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT