புதுதில்லி

மருத்துவமனைகளைத் தயாா்படுத்த ஐவா் குழு

4th Jun 2020 06:43 AM

ADVERTISEMENT

கரோனாவை எதிா்கொள்ள மருத்துவமனைகளைத் தயாா்நிலையில் வைப்பதற்காகவும், சுகாதார கவனிப்பு உள்கட்டமைப்புகளை பலப்படுத்தும் வகையில் ஐந்து மருத்துவா்கள் அடங்கிய குழுவை அமைத்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,298 ஆக உயா்ந்துள்ள நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தக் குழுவில் ஐபி பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் மகேஷ் வா்மா, ஜிடிபி மருத்துவமனை மருத்துவ இயக்குநா் டாக்டா் சுனில் குமாா், தில்லி மருத்துவக் கவுன்சில் தலைவா் டாக்டா் அருண் குப்தா, தில்லி மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவா் டாக்டா் ஆா்.கே. குப்தா, மேக்ஸ் மருத்துவமனையின் குழும மருத்துவ இயக்குநா் டாக்டா் சந்தீப் புதிராஜா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழு சுகாதாரக் கவனிப்பு உள்கட்டமைப்பு வசதியை அதிகரிப்பது, கரோனாவை எதிா்கொள்ள மருத்துவமனைகளை ஒட்டுமொத்தமாக தயாா்படுத்துவது ஆகியவை தொடா்பாக தில்லி அரசுக்கு வழிகாட்டும். மேலும், தில்லியில் நோய்த் தொற்றை நல்லமுறையில் நிா்வகிப்பதற்கான செயல்பாடுகளிலும் அரசுக்கு வழிகாட்டும். இந்தக் குழு ஜூன் 6-ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கரோனாவால் பலியானவா்களின் உடல்களை அகற்றுவதற்கான கொள்திறனை தில்லி மாநகராட்சிகள் இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது. அதேபோன்று, நோய் அறிக்குறி இல்லாத நோயாளிகள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT