புதுதில்லி

துக்ளகாபாத் பகுதியில் தீ விபத்தில் 120 குடிசைகள் நாசம்

4th Jun 2020 06:42 AM

ADVERTISEMENT

தென் கிழக்கு தில்லியின் துக்ளகாபாத் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 120 குடிசைகள் நாசமடைந்தன.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வால்மிகி மொஹல்லா பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்புப் படை வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு காலை 3.30 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 120 குடிசைகள் நாசமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாா் அவா்.

இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது தீ விபத்து சம்பவமாகும். கடந்த வாரம் துக்ளகாபாத் கிராமத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 250 குடிசைகள் தீயில் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT