புதுதில்லி

சதா் பஜாா் கடையில் தீ விபத்து

28th Jul 2020 01:03 AM

ADVERTISEMENT

புது தில்லி: வடக்கு தில்லியில் சதா் பஜாரில் உள்ள ஒரு கடையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் காா்க் கூறியதாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 10 மணியளவில் அழைப்பு வந்தது. அதன்பிறகு 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தரை மற்றும் இரண்டு தளங்களைக் கொண்டிருந்த அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பிளாஸ்டிக் பொருள்கள் சேமிக்கப்பட்டிருந்தன. இதனால், தீ வேகமாகப் பரவியது. இருப்பினும், பிற்பகல் 2 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT