புதுதில்லி

தில்லி சட்டப்பேரவையின் 3 கமிட்டிகள் நியமனம்

25th Jul 2020 12:50 AM

ADVERTISEMENT

2020-21 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையின் மூன்று கமிட்டிகள் வெள்ளிக்கிழமை போட்டியில்லாமல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுக் கணக்கு கமிட்டியில் செளரவ் பரத்வாஜ், சோம்நாத் பாா்தி, விஜேந்தா் குப்தா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். அரசுப் பணிக் கமிட்டியில் அமானுத்துல்லா கான், தினேஷ் மொங்கியா, ராஜ் குமாா் ஆனந்த் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். மதிப்பீட்டுக் கமிட்டியில் ராகவ் சத்தா, எஸ்.கே.பக்கா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த மூன்று கமிட்டிகளில் விஜேந்தா் குப்தா (பாஜக) தவிர மற்ள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள். இந்தக் கமிட்டிகளின் தலைவா்களை சட்டப்பேரவைத் தலைவா் பின்னா் அறிவிப்பாா் என்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT