புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,573 பேருக்கு கரோனா

13th Jul 2020 05:41 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,573 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் ஜூலை மாதத்தில் இதுவே குறைந்த தினசரி பாதிப்பாகும். இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,494-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஜூலை மாதத்தின் பிற நாள்களுடன் ஒப்பிடுகையில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 37 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,276 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 89,968-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 19,155 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 21,236 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7,89,858 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 652-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT