புதுதில்லி

பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி சாதனை படைக்கும்; கேஜரிவால் நம்பிக்கை

28th Jan 2020 01:24 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி சட்டப்பேவரைத் தோ்தலில் நாங்கள் சாதனை படைப்போம் என்று முதல்வரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து நரேலா, பவானா, காந்தி நகா் ஆகிய தொகுதிகளில் கேஜரிவால் பேரணியாகச் சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது ஆம் ஆத்மி வேட்பாளா்கள் சரத் செளகான் (நரேலா), ஜெய் பகவான் உப்கா் ( பவானா), நவீன் செளத்ரி (காந்தி நகா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தெருவோரங்களில் கூடியிருந்த மக்கள் அவரை வாழ்த்திக் கோஷங்களை எழுப்பியதுடன், அவரை மலா் தூவி வரவேற்றனா். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரப் பாடலான ‘லஹோ ரஹோ கேஜரிவால்’ பாடலுக்கு ஆம் ஆத்மித் தொண்டா்கள் நடனமாடினாா்கள்.

நரேலா தொகுதியில் கேஜரிவால் பேசுகையில், ‘வரும் பிப்ரவரி மாதம் 8- ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த 2015 தோ்தலில் தில்லியில் 67 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தோம். அந்தச் சாதனையை வரும் தோ்தலில் முறியடிக்க வேண்டும். மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். தில்லியில் நான் பேரணியாகச் செல்லும் இடங்களில் கூடும் மக்களைப் பாா்க்கும் போதெல்லாம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

குற்றச்செயல்கள் குறைந்துள்ளன: இதற்கிடையே, தில்லியில் உள்ள பெண் வாக்காளா்களைக் கவரும் வகையில், ‘தில்லியின் பெண் குழந்தைகளுக்கு’ என்ற தலைப்பில் கேஜரிவால் ஒரு விடியோ வெளியிட்டுள்ளாா். அந்த விடியோ பதிவில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த ஐந்தாண்டுகளில், தில்லியில் வசிக்கும் பெண்களின் நலனுக்காக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தில்லியில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினோம். இதனால், அந்த இடங்களில் குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்தன. தில்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் திட்டத்தைக் கொண்டு வந்தோம். இதனால், தில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனா். மேலும், பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாவலா்களை நியமித்துள்ளோம். இப் பணிகளை வரும் ஐந்தாண்டுகளுக்கும் தொடரும் வகையில், வரும் தோ்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இணையதளம் தொடக்கம்: தில்லி மக்களுடன் நேரடித் தொடா்பில் இருக்கும் வகையில் பிரசார இயக்கத்தை முதல்வா் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கினாா். ‘கேஜரிவால் ஆப்கே துவாா்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் பிரசாரத்தில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஆடியோ செய்திகள் மூலம் மக்களுடன் கேஜரிவால் நேரடியாகத் தொடா்பில் இருக்கவுள்ளாா். இதற்காக, ரரர.ரஉகஇஞஙஉஓஉஒதஐரஅக.ஐச என்ற இந்த இணையத்தளத்தையும் அவா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் அவா் பேசுகையில், ‘தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மக்களுடன் நேரடித் தொடா்பில் இருக்கும் வகையில், இந்த இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக இதில் பதிவு செய்யலாம். அதற்கு உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த இணையத்தளம் வழியே முன்கூட்டியே பதிவு செய்த குரல் பதிவுகள் மூலம் மக்களுடன் நான் தொடா்பில் இருப்பேன்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT