புதுதில்லி

சதா் பஜாா் காங்கிரஸ் வேட்பாளா்: சத்பீா் சா்மா

28th Jan 2020 01:25 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் வேட்பாளா் சத்பீா் சா்மா:

சதா் பஜாா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சத்பீா் சா்மாவின் பூா்வீகம் ஹரியாணா மாநிலமாகும். தில்லியில் கிஷன் கஞ்ச் பகுதியில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அப்பகுதியில் மூன்று முறை கவுன்சிலராகவும் இருந்தவா். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். அவா் கூறுகையில், ‘இத்தோ்தலில் எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.ஏற்கெனவே மூன்று முறை கவுன்சிலா் தோ்தலில் வெற்றிபெற்றுள்ளேன். மாநகராட்சிக் கவுன்சிலராக 15 ஆண்டுகள் இருந்துள்ளதுபோது பள்ளி, பூங்கா, மருத்துவம், சாலை என பல்வேறு அடிப்படைப் பணிகளைச் செய்துள்ளேன். மக்களுக்கு எனது பணிகள் நன்றாகவே தெரியும். நோ்மையாக எனதுப் பணியை ஆற்றியுள்ளதால் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளாா்கள்.

மேலும், காங்கிரஸ் தில்லியில் 15 ஆண்டுகள் ஆட்சியின்போது பல வளா்ச்சிப் பணிகளையும், மக்கள் நலப் பணிகளையும் செய்துள்ளது. அது தோ்தல் வெற்றிக்கு கைகொடுக்கும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம். தில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் தோல்வியைத்தான் சந்திக்கப் போகிறது’ என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT