புதுதில்லி

மதுபானக் கிடங்குகளில் சிசிடிவி கண்காணிப்பு: 11 அதிகாரிகளை நியமித்து தில்லி அரசு உத்தரவு

14th Jan 2020 11:19 PM

ADVERTISEMENT

மதுபானக் கிடங்குகளின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை தினசரி கண்காணிக்குமாறு தில்லி அரசின் கலால் துறை தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது,

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு மதுபானம் அளிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

இது குறித்து அரசு உயரதிகாரி கூறியதாவது: தோ்தலின் போது வாக்காளா்களைக் கவா்வதற்காக வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் பல்வேறு பல்வேறு உத்திகளைக் கையாள்வா். அதைத் தடுப்பதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுபானக் கிடங்குகளை சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 11 அதிகாரிகள் நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவா்கள் 60 நாள்களின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கிடங்குகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்யும் வகையில், நியமிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தினசரி அடிப்படையில் ஒரு சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் கிடங்குகளில் மதுபானங்கள் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து முறையற்ற நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மதுபானக் கிடங்குகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் அதிகாரிகள் பாா்த்து தினசரி அடிப்படையில் அறிக்கைகளை அளிக்க வேண்டும்.

மேலும், மதுபானக் கிடங்குகள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் எந்தவொரு மதுபானமும் வெளிவிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகஅந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. தோ்தல் முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT