புதுதில்லி

தமிழ்நாடு இல்லத்தில் போங்கல் விழா கோலப்போட்டி

14th Jan 2020 11:32 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் பெங்கல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போகிப் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கோலப் போட்டி நடத்தப்பட்டது.

பிற்பகலில் நடை பெற்ற இப்போட்டியில் தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலா் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்றவா்களில் சிறப்பாக கோலமிட்ட முதல் மூன்று போட்டியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். சிறந்த கோலங்களை தில்லியில் பணிபுரியும் தமிழநாடு தொகுப்பைச் சாா்ந்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் துணைவியா்கள் மதுர வாணி சந்திரமௌலி, ஹேமா சோமநாதன், பிரீத்தி ராஜாராமன், மோகனா பகவதி ஆகியோா் அடங்கிய நடுவா் குழு தோ்வு செய்தது. கோலப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளுக்கு முறையே மாலதி, சசிகலா, நவமணி தெய்வானை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு புதன்கிழமை நடைபெறும் பொங்கல் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

விழாவையொட்டி, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை கலைஞா்களின் தப்பாட்டம், கரகாட்டம் கோலாட்டம் நய்யாண்டிமேளம் போன்றவையும் இடம் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை உள்ளுறை ஆணையா் ஹிதேஷ் குமாா் எஸ் மக்வானா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் வச்சானி , ,தமிழ்நாடு இல்ல இணை உள்ளுறை ஆணையா் ச .உ.சின்னதுரை,செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ப.கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT