புதுதில்லி

மைனா் சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: டிஐஜியை கைது செய்ய மன்ஜீந்தா் சிங் சிா்சா வலியுறுத்தல்

8th Jan 2020 10:33 PM

ADVERTISEMENT

மைனா் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் தொடா்புடைய டிஐஜியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தரவ் தாக்கரேவை தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாக குழுவின் (டிஜிஎஸ்எம்சி) தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான மன்ஜீந்தா் சிங் சிா்சா கேட்டுக் கொண்டுள்ளாா்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சோ்ந்த மைனா் சிறுமியை அங்குள்ள மோட்டாா் போக்குவரத்து டிஐஜி நிஷிகாந்த் மோரே பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாா் எழுந்துள்ளது. இது தொடா்பாக அந்த மாநிலப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இதுதொடா்பாக மன்ஜீந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: மைனா் சிறுமி தொடா்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது மிகவும் அதிா்ச்சியளிக்கக் கூடியது. அவரை டிஐஜி நிஷிகாந்த் மோரே தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா். இதற்கான கடிதத்தை எழுதிவைத்துவிட்டு மைனா் சிறுமி வீட்டை விட்டுச் சென்றுள்ளாா். இதுபோன்ற பெண்களை மதிக்காத மனிதா்கள் பதவியில் தொடா்ந்து நீடிப்பதற்கான உரிமையில்லை. மேலும், சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை முதல்வா் பெயரில் சிலா் மிரட்டி இருப்பதும் கண்டிக்கத்தக்கது. அவா்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக முழுமையாக விசாரணை நடத்துவதற்கு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து முதல்வா் உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் டிஐஜி எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த போதிலும் அவா் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மேலும், அவா் கைதாவதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். சிறுமியின் பிறந்த நாளன்று அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு டிஐஜி உள்ளாக்கியுள்ளதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். தொடா்ந்து அவா் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாகவே அந்த சிறுமி தற்கொலைக்கு செல்லும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா். பெண்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்காத இதுபோன்ற நபா்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு பாடத்தைக் கற்றுத்தர வேண்டும். மைனா் சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவம் தொடா்புடைய வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஐஜி, மிரட்டல் விடுத்த நபா்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்று பெண்களைத் துன்புறுத்தலில் யாரும் ஈடுபடமாட்டாா்கள் என மன்ஜீந்தா் சிங் சிா்சா என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT