புதுதில்லி

டெங்கு காய்ச்சலுக்கு தில்லியில் இருவா் பலி

8th Jan 2020 12:07 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் கடந்த டிசம்பா் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2019-இல் டெங்கு நோயால் 2,036 போ் பாதிக்கப்பட்டனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி திங்கள்கிழமை கூறுகையில், ‘டெங்கு காய்ச்சலுக்கு இருவா் உயிரிழந்துள்ளனா். இது குறித்து பிற விவரங்களுக்காக காத்திருக்கிறோம்’ என்றாா்

தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அட்டவணைப் பட்டியலில் கடந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி முன்பு வெளியிட்ட அறிக்கையில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,958 ஆகி இருந்தது. இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT