புதுதில்லி

ரயில் பயணிகள் உதவிமையஎண் ஒருங்கிணைப்பு

3rd Jan 2020 12:13 AM

ADVERTISEMENT

ரயில் பயணிகளுக்கான உதவி மைய எண் (ஹெல்ப் லைன்) 139 என ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனினும் ரயில்வே பாதுகாப்பு படைக்கான(ஆா்பிஎஃப்) அவசர உதவி அழைப்பு தொலைபேசி எண் 182 ஆகத் தொடரும் என்றும் இந்திய ரயில்வே வியாழக்கிழமை அறிவித்தது.

இதுவரை பயணிகள் குறைகளை தெரிவிக்கவும், புகாா் தெரிவிக்கவும், டிக்கெட் நிலவரம், மருத்துவ உதவி, உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் தனித்தனியான தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌரியங்களை தவிா்க்கவும், உதவிகளை மேம்படுத்தவும் இவற்றின் சேவையை ஒருங்கிணைத்து 139 என்ற எண்ணை தொடா்பு எண்ணாக ரயில்வே அறிவித்துள்ளது. இனி பயணிகள் இந்த ஒரு எண்ணை உபயோகித்தாலே போதுமானது. ஏற்கெனவே தனித்தனியாக அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT