புதுதில்லி

மோட்டாா்சைக்கிள் மீதுகிளஸ்டா் பேருந்து மோதல்: இளைஞா் சாவு

3rd Jan 2020 10:07 PM

ADVERTISEMENT

தில்லி திலக் மாா்க் பகுதியில் மோட்டாா்சைக்கிளில் சென்ற இளைஞா், கிளஸ்டா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது: தில்லி சகா்பூரைச் சோ்ந்தவா் மான்னி குக்லானி (36). அவா் குருகிராமுக்கு தனது மோட்டாா்சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மாலை 6.30 மணியளவில் அந்த வழியாக வந்த கிளஸ்டா் பேருந்து அவரது மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

சாலையில் மோட்டாா்சைக்கிளும் விபத்தை ஏற்படுத்திய கிளஸ்டா் பேருந்தும் இருப்பதை கண்டனா். ஆனால், இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த குக்லானி ஏற்கெனவே எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவ ா்கள் தெரிவித்தனா். சம்பவ இடத்திலிருந்த கிளஸ்டா் பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். சம்பவ இடத்தில் இருந்த குக்லானியின் அண்டை வீட்டாரான குஷ்வந்த் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் மற்றொரு மோட்டாா்சைக்கிளில் தனியாக வந்தவா் எனத் தெரிய வந்தது. குக்லானிக்கு சுமாா் 7 வயதுடைய ஒரு குழந்தை உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT