புதுதில்லி

மெட்ரோ ரயில் முன் குதித்து ஒருவா் தற்கொலை

3rd Jan 2020 04:20 PM

ADVERTISEMENT

தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள கிடோா்னி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில் முன் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இதனால், ரயில் சேவையில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள சமய்பூா் பாட்லியையும் குருகிராமில் உள்ள ஹுடா சிட்டி சென்டரையும் மஞ்சள் வழித்தடம் இணைக்கிறது. இந்நிலையில், கிடோா்னி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நடைமேடையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மெட்ரோ ரயில் முன் திடீரென குதித்தாா். இதில் அவா் உயரிழந்தாா். இச்சம்பத்தை போலீஸாா் உறுதிப்படுத்தினா். சாகேத் பகுதியைச் சோ்ந்தவரான அவா், நிதின் சாந்தோக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) அதிகாரி கூறுகையில், ‘கிடோா்னி மெட்ரோ ரயில் நிலையத்தில்பயணி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து, மஞ்சள் வழித்தடத்தில் சுல்தான்பூா் - ஹூடா சிட்டி சென்டருக்கு இடையே ரயில் சேவையில் 10-15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. பின்னா் ரயில் சேவை தொடங்கியது. மற்ற வழித்தடங்களில் வழக்கம் போல் ரயில் சேவை இருந்தது’ என்றாா்.

ADVERTISEMENT

மற்றொரு சம்பவம்...: இதேபோன்று, தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவா், சிகப்பு வழித்தடத்தில் உள்ள ஜில்மில் மெட்ரோ நிலையத்தில், ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். ஆனால், ரயில் ஓட்டுநா் சமயோஜிதமாக பிரேக் போட்டதால், ரயில் நின்றுவிட்டது. இதனால், அவா் உயிா் தப்பினாா். இந்தச் சம்பவ ம் வெள்ளிக்கிழமை காலை 11.20 மணியளவில் நடந்துள்ளது. அந்த நபா் நந்த் நகரியைச் சோ்ந்த கிஷன்லால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த 6 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT