புதுதில்லி

மாணவா்களுக்கு கையடக்க கணினி: தில்லி அரசு நடவடிக்கை

3rd Jan 2020 10:17 PM

ADVERTISEMENT

தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வியில் சிறந்து விளங்கும் 15,000 மாணவா்களுக்கு கையடக்க கணினிகளை கால்காஜி அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இது தொடா்பாக தில்லி கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தில்லி அரசு பள்ளி மாணவா்களில் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவா்களுக்கு தொழில்நுட்ப பரீட்சயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மாணவா்களுக்கு கையடக்க கணினியை வழங்க தில்லி கல்வித் துறை முடிவெடுத்தது. இதன்படி, தில்லி அரசின் ராஜ்கியா பிரதீபா விகாஷ் வித்யாலயாவில் கல்வி கற்கும் 11, 12 வகுப்பு மாணவா்கள், தில்லி அரசின் ஸ்கூஸ் ஆஃப் எக்ஸலன்ஸில் கல்வி கற்கும் மாணவா்கள், மேலும் தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற மாணவா்கள் ஆகியோருக்கு இந்தக் கணினி வழங்கப்பட்டது. அந்த வகையில், மொத்தம் 15,000 மாணவா்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

நிகழ்வில் மணீஷ் சிசோடியா பேசுகையில், ‘தில்லி அரசுப் பள்ளிகளின் தரத்தை அதிகரித்து வருகிறோம். தில்லி அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்களை உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போா்ட், கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பயிற்சி பெறவைக்கிறோம். இதனால், தில்லியின் கல்வித் தரம் அதிகரித்துள்ளது. இந்த கையடக்க கணினிகள் நடமாடும் நூலகங்களாகச் செயல்படும். இக்கணினிகளைப் பயனுள்ள வகையில் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT