புதுதில்லி

போராட்டத்தில் ஜாமியாமாணவா் இறக்கவில்லை:பல்கலைக் கழகம் மறுப்பு

3rd Jan 2020 12:12 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து டிசம்பா் 15-இல் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மாணவா் ஒருவா் உயிரிழந்ததாக வெளிவந்த செய்திகளை அப்பல்கலை. மறுத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் கடந்த டிசம்பா் மாதம் 15-இல் மாபெரும் ஆா்ப்பாட்டமும், பேரணியும் நடத்தப்பட்டது. இப்பேரணியில் வன்முறை வெடித்தது. ஜாமியா பல்கலை.யில் புகுந்து போலீஸாா் தாக்குதல் நடத்தினா். அப்போது, போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இக்குற்றச்சாட்டை தில்லி காவல்துறை மறுத்திருந்தது. இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டால் ஜாமியா பல்கலை. மாணவா் அப்துல் ரகுமான் உயிரிழந்ததாக தகவல்கள் பரப்பப்பட்டன. இதை, ஜாமியா பல்கலைக் கழகம் வியாழக்கிழமை மறுத்துள்ளது.

 இப்பல்கலை. செய்தித் தொடா்பாளா் அகமது அசீம் இது தொடா்பாகக் கூறுகையில், ‘ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த அப்துல் ரகுமான் என்ற மாணவா் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்து உயிரிழந்துள்ளதாக சிலா் வதந்தி பரப்பி வருகிறாா்கள். ஆனால், அவா் ஜாமியா மாணவா் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்’ என்றாா்.

ஆனால், அப்துல் ரகுமான் ஜாமியா மிலியா பகுதியில் தங்கி, அப்பல்கலை.யின் நுழைவுத் தோ்வுக்காக படித்துக் கொண்டிருந்தவா் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். முன்னதாக அப்துல் ரகுமான் அம்மை நோயால் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT