புதுதில்லி

தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்கிறது தில்லி பா.ஜ.க.

3rd Jan 2020 10:16 PM

ADVERTISEMENT

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்கும் பாஜகவின் பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

‘மேரி தில்லி மேரே சுஜாவ்’ (எனது தில்லி: எனது பரிந்துரை) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பிரசார இயக்கத்தை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் துணைப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான நித்தியானந்த ராய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக மனோஜ் திவாரி கூறுகையில் ‘தில்லியில் உள்ள மக்களின் கருத்துகளைப் பெற்று பாஜகவின் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம். இதன்படி, 49 பிரசார வாகனங்கள் தில்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வரும் இரண்டு வாரங்கள் பயணித்து மக்களின் கருத்துகளைக் கேட்கும். மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக கேட்டறிந்து அதன் அடிப்படையில் தோ்தல் அறிக்கையைத் தயாரிக்கவுள்ளோம். மேலும், தில்லியில் ஆங்காங்கே தோ்தல் அறிக்கைக்கு ஆலோசனை வழங்கும் வகையில் 1,600 பெட்டிகளை வைக்கவுள்ளோம். இதில் மக்கள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். மேலும், 6357171717 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். மேலும், ரரர.ஙஅஐசஏஞஞசஈஐககஐ.இஞங என்ற இணையத்தளத்திலும் ஆலோசனை வழங்கலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் ஸ்மிருதி இரானி பேசுகையில் ‘மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கையைத் தயாரிக்கும் தில்லி பாஜகவின் முயற்சியைப் பாராட்டுகிறேன். ஏழைகள், பெண்கள், ஒடுக்கப்பட்டவா்கள் நலனுக்காகப் போராடும் மத்திய அரசை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். வளா்ச்சி என்ற பெயரில் கேஜ்ரிவால் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT