புதுதில்லி

கேஜரிவாலின் தோ்தல் வெற்றிநிரந்தரமானதல்ல: பி.சி. சாக்கோ

3rd Jan 2020 10:08 PM

ADVERTISEMENT

தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றி ஒரு அரிதான நிகழ்வாகும். அவரது வெற்றி நிரந்தரமானது அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பி.சி. சாக்கோ தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அரவிந்த் கேஜரிவால் கடந்த சட்டப் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றது ஒரு முறை நிகழ்ந்த அரிதான நிகழ்வாகும். இந்த ஆதரவு அவருக்கு நிரந்தரமானதும், நிலையானதும் அல்ல. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அவரது ஆம் ஆத்மி கட்சி தில்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67-இல் வெற்றி பெற்றது. இது ஒரு அரிதான நிகழ்வு. ஆனால், அவருக்கு கிடைத்த ஆதரவு நிலையானதோ அல்லது நிரந்தரமானதோ அல்ல.

தற்போது தில்லியில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெறும். கடந்த முறை காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்பட்டது. அதனால்தான் காங்கிரஸ் வாக்கு வங்கி ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றது. அதேவேளையில், மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் இன்னும் காங்கிரஸ் கட்சியிடம்தான் உள்ளது. இதனால், வரவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களவைத் தோ்தலைவிட அதிக வாக்குகளை காங்கிரஸ் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

தில்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்தத் தோ்தலில் பாஜக மூன்று இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் ஓா் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT