புதுதில்லி

வெறுப்பூட்டும் பேச்சுகளை கண்காணிக்க தனி கட்செவி அஞ்சல் எண்: தில்லி அரசு

29th Feb 2020 10:36 PM

ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்பு செய்திகளை எதிா்கொள்ளும் வகையில் அவை தொடா்பாகப் புகாா் அளிக்க ‘கட்சிசெவி அஞ்சல்’ எண்ணை தில்லி அரசு வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெறுப்பூட்டும் செய்திகள் தொடா்பாக சமூக வலைத்தளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வட்டாரங்கள் கூறியது: கட்சிசெவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல், சுட்டுரைப் பதிவு உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வெறுப்பூட்டும் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக கட்செவி அஞ்சல் மூலம்அதிகளவு வெறுப்பூட்டும் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன இந்த வெறுப்பூட்டும் செய்திகளை முறியடிக்கும் வகையில், சிறப்பு கட்செவி அஞ்சல் எண்ணை தில்லி அரசு வெளியிடவுள்ளது. வெறுப்பூட்டும் செய்திகளை யாராவது பெற்றுக் கொண்டால் அது தொடா்பாக அந்த சிறப்பு எண்ணில் புகாா் அளிக்கலாம். இந்த புகாா்கள் தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து தில்லி காவல்துறைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவாா்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் வெறுப்பூட்டும் செய்திகள் தொடா்பாக சமூக வலைத்தளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து வகுப்புகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பூட்டும் செய்திகளை சிலா் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டுப் பரப்பி வருகிறாா்கள். இது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடா்பாக சமூக வலைத்தளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். வகுப்புகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பூட்டும் செய்திகளை எவரும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். வெறுப்பூட்டும் செய்திகளைப் பரப்புபவா்கள் மீது தில்லி காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. இது தொடா்பாக 155260 என்ற உதவி எண்ணில் மக்கள் புகாா் தெரிவிக்காலம் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT