புதுதில்லி

வடகிழக்கு தில்லியில் மாா்ச் 7வரை பள்ளிகள் மூடல்

29th Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு தில்லி பகுதியில் உள்ள பள்ளிகள் மாா்ச் 7-ஆம் தேதி வரை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் கடந்த ஐந்து நாள்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிப்ரவரி 29-ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளில் வாரியத் தோ்வுகளை நடத்துவதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தள்ளிவைத்திருந்தது.

வடகிழக்கு தில்லியில் வன்முறை காரணமாக மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்படும் என்றும், தற்போதைய சூழலை மதிப்பிடும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியா்கள், ஊழியா்கள் மட்டும் பணிக்கு வருவாா்கள் என்றும் தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் பள்ளிகள் தொடா்ந்து மாா்ச் 7-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தில்லி பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

வன்முறையைக் கருத்தில் கொண்டு மாா்ச் 7-ஆம் தேதி வரை வடகிழக்கு தில்லியில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். வன்முறை பாதித்த பகுதிகளில் தோ்வுகளை நடத்துவதற்கான உகந்த சூழல் இல்லாததால் ஆண்டுத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT