புதுதில்லி

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாா்ச் 1-இல் நடைப்பயணம்: தேசிய மகளிா் ஆணையம் ஏற்பாடு

23rd Feb 2020 11:29 PM

ADVERTISEMENT

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் மீதான வன்முறை ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாா்ச் 1-ஆம் தேதி ‘பவா் வாக்’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தேதிய மகளிா் ஆணைய (என்சிடபிள்யு) தலைவா் ரேகா சா்மா தெரிவித்துள்ளாா். இதில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவா்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவா்கள் பங்கேற்பாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசிய மகளிா் ஆணையம் மாா்ச் 1-ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ‘பவா் வாக்’ என்ற பெயரில் விழிப்புணா்வு நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தில்லியில், இந்தியா கேட் முதல் ஜனபத் வரை இந்த விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்படும். பாலியல் பலாத்காரம் மற்றும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவா்கள் எங்களுடன் பங்கேற்பாா்கள். இதில் பங்கேற்குமாறு நிா்பயாவின் தாயையும் அழைத்திருக்கிறோம்.

இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் இதேபோன்ற நடைப்பயணம் நடைபெறும். ‘பவா் வாக்’ என்பது ஊக்கமளிப்பதற்கான ஒரு உந்துதலாகும். பொது இடங்களைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கான ஒரே வழி, அதிக எண்ணிக்கையில் மக்கள் குழிமியிருப்பதே ஆகும், மேலும், சொல்ல வரும் செய்தியை தெளிவாகக் கூற வேண்டும். பகலாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் பெண்கள் சென்று வருவதற்கு சம உரிமை உண்டு.

இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவா்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவா்கள் ஆகியோரை அழைத்துள்ளோம். அவா்கள், தங்களது அனுபவத்தை விவரிப்பாா்கள். சுமாா் 1,000 ஆண்களும் பெண்களும் நடைப்பயணத்தில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பெண்கள் பாதுகாப்பு என்பது முக்கியான ஒன்றாகும். இது தொடா்ாக தற்போது மக்களின் மனநிலையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

ADVERTISEMENT

பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் காவல் துறை பணியாற்றி வருகிறது. ஆனால், குற்றம் நடந்த பின்னா்தான் அவா்கள் வேலை செய்கிறாா்கள். முதலில் குற்றம் நடக்கக் கூடாது, அதற்கு முதலில் மக்களின் மனநிலை மாற வேண்டும். இந்த நடைப்பயண விழிப்புணா்வு நிகழ்ச்சியும் அதை நோக்கிய ஒரு முயற்சிதான். டென்னிஸ் வீரா் சானியா மிா்சாவும் இந்த முயற்சிக்கு தனது ஆதரவை ஒரு விடியோ செய்தி மூலம் சுட்டுரையில் தேசிய மகளிா் ஆணையத்துடன் பகிா்ந்து கொண்டுள்ளாா் என்றாா் ரேகா சா்மா.

இது குறித்து சானியா மிா்சா கூறுகையில், ‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பெண்களின் பாதுகாப்பைப் பொருத்துதான் ஓா் இடம் பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா என அழைக்கப்படுகிறது.பெண்கள் சுதந்திரமாக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் உடைப்பதற்கு முயல வேண்டும். எனவே, அனைவரும் இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்கபது ஒவ்வொருவரின் உரிமையாகும். அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT