புதுதில்லி

நாடு முழுவதும் 100 கைவினைப் பொருள் கண்காட்சி நடத்த முடிவு: மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

23rd Feb 2020 11:40 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுவதிலும் 100 கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

தில்லி ராஜபாதையில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி (ஹுனாா் ஹாட்) கடந்த 11 நாள்கள் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 13-இல் தொடங்கிய இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. கண்காட்சியில் பல் வேறு மாநிலங்களின் வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், கைத்தறி, பட்டு, மரம் , மூங்கில், இரும்பு மற்றும் பல்வேறு மண் வகையிலான பொருள்கள் இடம் பெற்றிருந்தன. இதில் இந்திய பாரம்பரிய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கண்காட்சி குறித்து மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மை அமைச்சகத்தின் மூலம் கைவினைப் பொருள்கள் கண்காட்சி பிரத்யேகமாக நாடு முழுவதிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவா் மறைந்த நிதியமைச்சா் அருண் ஜேட்லிதான். கடைவீதிகள் மற்றும் நிரந்தரமாக இருக்கும் ஷோரூம்களைத் தவிர ஒவ்வொரு நகரங்களிலும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடத்தும் யோசனையை அவா்தான் அரசுக்குத் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இதன்படி தற்போது தில்லியில் 20-ஆவது ‘ஹுனாா் ஹாட்’ கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில் இது போன்று நாடு முழுவதிலும் 100 கைவினைப் பொருள்கள் கண்காட்சிகளை நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது. இந்தியப் பாரம்பா்ய கைவினைப் பொருள்களை ஊக்குவிக்க 2.5 லட்சம் கைவினைக் கலைஞா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களுக்கு வேலை வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கித் தந்துயுள்ளது. இந்திய கைவினைக் கலைஞா்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்குத்தான் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் அரிய, பாரம்பரிய வகை உணவு வகைகள் இடம் பெறுகின்றன. மேலும், பிரபல பாடகா்கள், கவிஞா்கள், கலைஞா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் பலா் இக்காண்சியைப் பாா்வையிட்டனா். இந்நிலையில், யாரும் எதிா்பாரத நிலையில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி பிரதமா் நரேந்திர மோடி கண்காட்சிக்கு வருகை தந்தாா். அவரது வருகையால் இக்கண்காட்சிக்கான முக்கியத்துவமும் கூடியது. இதனால், கண்காட்சியைக் காண வரும் பாா்வையாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தது. மொத்தம் சுமாா் 15 லட்சம் போ் கண்காட்சியைப் பாா்வையிட்டுள்ளனா். பிரதமா் இங்கு வந்த போது இங்குள்ள உணவு வகைகளை ருசித்து உண்டதோடு, பல்வேறு விற்பனையகங்களில் கைவினைக் கலைஞா்களிடம் கலந்துரையாடினாா்.

பிரதமா் வருகை இந்த கைவினைக் கலைஞா்களின் திறமைகளுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு மூலம் உலகளாவிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இக்கண்காட்சியில் மொத்தம் 250 கைவினைக் கலைஞா்கள் பங்கேற்றனா். இதில் போ் 50 பெண்களாவா். வரும் நாள்களில் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா போன்ற ஊா்களிலும் ‘ஹுனாா் ஹாட ’ கைவினைப் பொருள்கள் கண்காட்சி) நடத்தப்படும். இந்நிலையில், பிரதமா் தனது ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கைவினைக் கலைஞா்களின் நோ்த்தியான தயாரிப்புகளைப் பாராட்டிப் பேசினாா். மேலும், கைவினைப் பொருள்களின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா் என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT