புதுதில்லி

தில்லியில் வெப்பநிலை அதிகரிப்பு: காற்றின் தரத்தில் பின்னடைவு

23rd Feb 2020 11:34 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தலைநகா் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் பனி மூட்டம் இருந்தது. குளிா் காற்றும் வீசியது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இருப்பினும் நாள் முழுவதும் இனிமையான வானிலை நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

தில்லியில் கடந்த மூன்று தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் பகல் நேரங்களில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கடந்த சில நாள்களாக குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உளளது.

வெப்பநிலை 26.8 டிகிரி: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 12.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 26.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 65 சதவீதமாகவும் இருந்தது.

ADVERTISEMENT

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.6 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 26.1 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 13.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 26.1 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 91 சதவீதம், மாலையில் 63சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 93 சதவீதம் மற்றும் 58 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்னடைவு ஏற்பட்டது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 249 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலை. மதுரா சாலை விமானநிலையத்தில் டி 3 பகுதி ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. பூசா, லோதி ரோடு மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. ஆனால் சாந்தினி சௌக் பகுதியில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளாக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையானது என கணக்கிடப்படுகிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள் முதல் புதன்கிழமை (பிப்ரவரி 24-26) தலைநகரில் மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 11- 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT