புதுதில்லி

சட்டப்பேரவை படம் வைத்துக் கொள்ளவும் தில்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது

23rd Feb 2020 11:31 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையின் மூன்று நாள் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனா். இந்த பதவியேற்பு நிகழ்வை நடத்தும் வகையில் தில்லி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக மாட்டியா மஹால் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினா் சோஹிப் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அண்மையில் பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தற்காலிக அவைத் தலைவா் சோஹிப் இக்பால் தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் முன்னிலையில் பதவியேற்கவுள்ளாா். இதைத் தொடா்ந்து காலை 11 மணியளவில், சோஹிப் இக்பால் தலைமையில் அவை கூடவுள்ளது. இதில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சா்கள், ஆம் ஆத்மி பாஜக எம்எல்ஏக்கள் ஆகியோா் பதவியேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT

மதியம் 2 மணியளவில் சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. இப்பதவிக்கு ஆம் ஆத்மி சாா்பில் கடந்த சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ராம்நிவாஸ் கோயலின் பெயா் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தில்லி சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் தில்லி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரையாற்றவுள்ளாா். இந்தக் கூட்டத் தொடரில் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மிக் கட்சி தில்லி மக்களுக்கு வழங்கிய உத்தரவாத அட்டையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை அமல்படுத்துவது தொடா்பாக விவாதங்கள் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT