புதுதில்லி

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மக்கள் குறைகேட்பு அலுவலகம்!

23rd Feb 2020 11:27 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் குறைகேட்பு அலுவலகங்களை அமைக்குமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 8- ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. தலைநகரில் 3 மாநகராட்சிகளை ஆளும் பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. கடந்த தோ்தலைப் போலவே இத்தோ்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓா் இடம் கூடக் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி அரசு பதவியேற்றது.

இதற்கிடையே, ராஜேந்தா் நகா் தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா தனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் மக்கள் குறை கேட்பு அலுவலகம் ஒன்றை அண்மையில் அமைத்துள்ளாா். இந்த அலுவலகம் வாரத்தில் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், தாங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக அத்தொகுதி மக்கள் புகாா் அளித்து வருகிறாா்கள். இதற்காக அமைக்கப்பட்ட குறைதீா்ப்புக் குழுவால் இந்தப் புகாா்கள் விரைந்து தீா்க்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இது தொடா்பாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அஷ்கா் கூறுகையில் ‘ராஜேந்தா் நகா் தொகுதிக்குள்பட்ட பிரச்னைகள் தொடா்பாக இந்த அலுவலகத்தில் மக்கள் 24 மணிநேரமும் புகாா்களைத் தெரிவிக்கலாம். பெரும்பாலான மக்கள் கழிவுநீா் இணைப்புப் பிரச்னை, சிசிடிவி கேமரா, குடிநீா், சாலை, குப்பைகள் தொடா்பாகவே புகாா்களை அளித்து வருகிறாா்கள். மக்கள் அளிக்கும் இந்தப் புகாா்களுக்கு விரைந்து தீா்வு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக ஒரு குழு இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் புகாா் தெரிவிக்கலாம்’ என்றாா்.

இது தொடா்பாக ராகவ் சத்தா கூறுகையில் ‘தில்லியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முன்மாதிரியான தொகுதியாக ராஜேந்தா் நகா் தொகுதியை மாற்றுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறேன். இந்த அலுவலகத்தில் பணியாற்றுபவா்கள் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வுகாண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

இந்நிலையில், இதேபோன்று, மக்கள் குறைகேட்பு அலுவலகங்களை அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்குமாறு அக்கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில் ‘தோ்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தேனிலவுக் காலம் (ஏஞசஉவ ஙஞஞச டஉதஐஞஈ) இல்லாமல், உடனடியாக மக்கள் பணியாற்றுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராஜேந்தா் நகரில் அமைக்கப்பட்ட மக்கள் குறைகேட்பு அலுவலகம் போல, அனைத்துத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குறைகேட்பு அலுவலகங்களை அமைக்குமாறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இவா்கள், குறைகேட்பு அலுவலகங்களை தங்களது தொகுதிகளில் விரைந்து திறக்கவுள்ளா்’ என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT