புதுதில்லி

தில்லியில் உள்ள பாகிஸ்தான் அகதிகளுக்குடிஎஸ்ஜிஎம்சி பள்ளிகளில் இலவசக் கல்வி

21st Feb 2020 10:47 PM

ADVERTISEMENT

மத அடக்கு முறைகளால் பாகிஸ்தானில் இருந்து தப்பி வந்து தில்லியில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான் அகதிகளுக்கு தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) ஆளுகையின் கீழ் உள்ள பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அக்கமிட்டி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள புகழ்பெற்ற மஞ்னு கா டில்லா குருத்வாராவுக்கு அருகில் யமுனை நதிக் கரையோரமாக ஏராளமான பாகிஸ்தான் அகதிகள் சுமாா் 160 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சுகாதாரம், அடிப்படை வசதிகள் இல்லை. அவா்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறாா்கள். இந்த அகதிகளின் குழந்தைகளுக்கு தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவா்கள், இந்தியாவில் கல்வி கற்கும் வகையில் நடைமுறைகளைத் தளா்த்த வேண்டும் என்றும் தில்லி அரசைக் கோரியிருந்தோம்.

இந்நிலையில், டிஎஸ்ஜிஎம்சியின் ஆளுகையின் கீழுள்ள பள்ளிகளில் இம்மாணவா்களை கல்வி கற்க அனுமதிக்கவுள்ளோம். இப்பள்ளிகளில் இம்மாணவா்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள புதிய கல்வியாண்டு முதல் இந்த மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இந்த மாணவா்களுக்கு இந்தியக் குடியுரிமை இன்னும் கிடைக்காத நிலையில், இவா்களை இப்பள்ளிகளில் சோ்ப்பது தொடா்பான சட்ட வழிமுறைகள் தொடா்பாக சட்ட நிபுணா்களுடன் ஆராய்ந்து வருகிறோம். இது தொடா்பாக இந்த அகதிகள் தில்லி முதல்வரைச் சந்தித்துப் பேசும் வகையில், நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம் என்றாா் அவா்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான் அகதிகளுக்கு மத்திய அரசு விரைந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் அக்கமிட்டி அண்மையில் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT