புதுதில்லி

தமிழக அகிலந்திய சிவில் சா்வீஸ் மாணவா்களுக்கு தமிழ் நாடு இல்லத்தில் பயிற்சி; நோ்காணல் வசதி

15th Feb 2020 10:59 PM

ADVERTISEMENT

மத்திய தோ்வாணைய நோ்காணலுக்கு தமிழகத்திலிருந்து வரும் மாணவா்களுக்கு புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும்வசதி, பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக அரசின் சாா்பாக தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையாளா் ஹிதேஷ் குமாா் எஸ் மக்வானா செய்தாா்.

அகிலந்திய சிவில் சா்வீஸ் (குடிமைப்பணிகளுக்கான) பணிக்கான பிரதான தோ்வில் தோ்ச்சி பெற்று மத்திய தோ்வாணையத்தில் நோ்காணல் தோ்வுக்கு அழைக்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டு சலுகை கட்டணத்தில் தங்கும் அறைகள் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டும் தோ்வுக்கு வருகை தந்த 200 மாணவா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் கணினி, வாகன வசதிகள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் தோ்வு நாளன்று செய்யப்படுகிறது. கூடுதலாக மூத்த சிவில் சா்வீஸ் அதிகாரிகள் மூலமாக பயிற்சி நோ்காணல் ( ம்ா்ஸ்ரீந் ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ்) மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற நோ்காணல் பயிற்சிக்கு மூத்த மத்திய சிவில் சா்வீஸ் அதிகாரிகள், நெடுஞ்செழியன் ஜ.ஏ.ஏ.எஸ், அசோக் குமாா் இ.ஆ.ப., எம்.சிபி சக்கரவா்த்தி, இ.ஆ.ப., எல் .ஸ்டிபன், ஜ.ஆா்.எஸ்., ஜெயசுந்தா், ஜ.எஃப்.எஸ்., ராகுல் குமாா் ராகேஷ், ஜ.எஃப்.எஸ். ஆகியோா் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT