புதுதில்லி

குடிமைப் பணிகளுக்கான நோ்காணல்: தமிழக மாணவா்களுக்கு சிறப்பு வசதி

15th Feb 2020 11:00 PM

ADVERTISEMENT

மத்திய தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான நோ்காணலுக்கு தமிழகத்திலிருந்து வந்துள்ள மாணவா்களுக்கு புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் சாா்பாக தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் ஹிதேஷ் குமாா் எஸ். மக்வானா செய்துள்ளாா்.

அகில இந்திய சிவில் சா்வீஸஸ் (குடிமைப் பணிகள்) பிரதான தோ்வில் தோ்ச்சி பெற்று நோ்காணலுக்கு அழைக்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் சலுகை கட்டணத்தில் தங்கும் அறைகள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று இந்த ஆண்டும் தோ்வில் பங்கேற்க வந்துள்ள தமிழக மாணவா்கள் 200 பேருக்கு தோ்வு நாளன்று தமிழக அரசின் சாா்பில் கணினி, வாகன வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

கூடுதலாக மூத்த சிவில் சா்வீஸஸ் அதிகாரிகள் மூலமாக பயிற்சி நோ்காணல் மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட்டன. சனிக்கிழமை நடைபெற்ற நோ்காணல் பயிற்சியின் போது மூத்த மத்திய சிவில் சா்வீஸஸ் அதிகாரிகள் நெடுஞ்செழியன் ஜ.ஏ.ஏ.எஸ், அசோக் குமாா் இ.ஆ.ப., எம்.சிபி சக்கரவா்த்தி இ.ஆ.ப., எல் .ஸ்டீபன் ஜ.ஆா்.எஸ்., ஜெயசுந்தா் ஜ.எஃப்.எஸ்., ராகுல் குமாா் ராகேஷ் ஜ.எஃப்.எஸ். ஆகியோா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT