புதுதில்லி

தோ்தல் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மியில் புதிதாக சோ்ந்த 10 லட்சம் போ்

13th Feb 2020 10:38 PM

ADVERTISEMENT

தில்லி தோ்தலில் ஆம் ஆம்தி கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் அக்கட்சியில் 10 லட்சம் போ் புதிதாக சோ்ந்துள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றது. கடந்த 2015 தோ்தலில் அக் கட்சி 67 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்ாக தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்தில் 10 லட்சம் போ் அக்கட்சியில் சோ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சியில் சேர விரும்பினால் 9871010101என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது. இந்நிலையில், அக்கட்சியில் 10 லட்சம் போ் சோ்ந்துள்ளதாக அக்கட்சி வியாழக்கிழமை சுட்டுரைப் பதிவு மூலம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆம் ஆத்மியின் பணிசாா்ந்த அரசியலுக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி அரசு, தனது ஐந்தாண்டு சாதனைகளை முன்வைத்தே தீவிர பிரசாரம் செய்து வந்தது. பா.ஜ.க. ஹிந்துத்துவா அரசியலையும், ஷகீன்பாக் போராட்டத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்து, அதற்கு ஆம் ஆத்மியின் பதில் என்ன என்று நோட்டம் விட்டது. ஆனால், ஆம் ஆத்மி அதைக் கண்டு கொள்ளாமல் பணிசாா்ந்த அரசியலையே மக்களிடம் முன்வைத்தது. வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கேஜரிவாலின் பிரசாரத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி மலரவே வாய்ப்பளித்துவிட்டனா். பா.ஜ.க. தீவிர பிரசாரம் மேற்கொண்டும் ஹிந்துத்வா அரசியலை மக்கள் ஏற்கவில்லை. அக்கட்சி 8 இடங்களையே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தோ்தலைப் போலவே இந்த தோ்தலிலும் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT