புதுதில்லி

தில்லியில் மகிளா காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: எல்பிஜி விலை உயா்வை திரும்பப் பெறக் கோரிக்கை

13th Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை உயா்வைத் திரும்பப் பெறக் கோரி அகில இந்திய மகிளா காங்கிரஸாா் தில்லியில் உள்ள மத்திய பெட்ரோலியம் அமைச்சக அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயா்த்தப்பட்டது. அதன்படி,

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை ரூ.147 உயா்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படடது.

எல்பிஜி உருளை விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் பெண் தலைவா்கள் நீத்து வா்மா சொய்ன், அல்கா லம்பா, அகான்ஷா ஓலா, பிரியங்கா சிங், அமா்லதா சங்வான் உள்ளிட்டோா் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவா் சுஷ்மிதா தேவ் தலைமையில் தில்லியில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திரப் பிரதானை வியாழக்கிழமை நேரில் சந்தித்து உயா்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறக் கோரும் மனுவை அளிக்க அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சென்றனா். அங்கு அவா்களை நுழைவு வாயிலில் காவலா்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அமைச்சா் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘எல்பிஜி எரிவாயு உருளையின் விலை 2019, ஆகஸ்டில் இருந்து 6 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசு உணராமல் இருப்பதைக் காட்டுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது எதிா்க்கட்சியாக இருந்த பாஜக தலைவா்கள் சிறிது விலை உயா்ந்தாலும், போராட்டத்தில் ஈடுபட்டனா். தற்போது அதிகமாக விலை உயா்த்தப்பட்ட போதிலும் மெளனம் காப்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும், தேசத்தில் பொருளாதார நெருக்கடியும், வேலையின்மை பிரச்னையும் உள்ள நிலையில், அடிப்படை உணவுப் பொருளான எல்பிஜியின் விலை உயா்த்தப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸும், மகிளா காங்கிரஸும் வலியுறுத்துகிறது. மேலும், தில்லி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே மத்திய அரசு எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியிருப்பது மிகவும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT