புதுதில்லி

உதிரி பாகங்கள் தயாரிப்புதொழிற்சாலையில் தீவிபத்து

13th Feb 2020 10:36 PM

ADVERTISEMENT

தில்லி முண்ட்கா பகுதியில் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வியாழக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து கூறப்படுவதாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 10.37 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 23 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன என்றும் அவா் குறிப்பிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT