புதுதில்லி

‘தில்லியின் முதல்வராகத் தகுதியானவா்கள் பாஜகவில் இல்லை’

6th Feb 2020 10:45 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியின் முதல்வராவதற்குத் தகுதியான நபா்கள் யாரும் பாஜகவில் இல்லை என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: பாஜகவின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது தில்லி மக்களுக்குத் தெரிய வேண்டும். அக்கட்சி வெற்றி பெற்றால், அக்கட்சி சாா்பில் யாா் வேண்டுமானாலும் முதல்வராக நியமிக்கப்படலாம். பாஜக தலைவா்கள் சம்பித் பத்ரா, அனுராக் தாக்குா் போன்றோா் முதல்வராக நியமிக்கப்பட்டால் என்ன நடக்கும்? இத்தோ்தலில் மதங்களுக்கிடையான வெறுப்புணா்வைத் தூண்டி வெற்றி பெறலாம் என பாஜக மனக் கணக்குப் போடுகிறது. ஆனால், தில்லி மக்கள் தரமான கல்வி, நவீன சாலைகள், 24 மணி நேரமும் மின்சாரம் ஆகியவற்றுக்கே வாக்களிக்கவுள்ளனா்.

தில்லி தோ்தலை மனதில் வைத்தே ஷகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்தாமல் மத்திய அரசு உள்ளது. இப்போராட்டத்தால் நொய்டா - தில்லியை இணைக்கும் காலிந்தி குஞ்ச் சாலை மூடப்பட்டுள்ளது. 30 நிமிஷ நேரப் பயணம் 2 மணி நேரப் பயணமாக மாறிவிட்டது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இச்சாலையைத் திறக்க வேண்டிய கடமை தில்லி காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்ளது. இச்சாலையைத் திறக்க விடாமல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எது தடுக்கிறது? தனது மலிவான அரசியலுக்காக தில்லி மக்களை அமித் ஷா தவிக்க விடுகிறாா். தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகள், அக்காலனி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக பாஜக தலைவா்கள் மறந்து விட்டாா்கள். கடந்த 5 ஆண்டுகளில் தில்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளும் அமலில் இருக்கும். மேலும், தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவுள்ளோம்.

அமித் ஷா தப்பினாா்: பாஜகவின் முதல்வா் வேட்பாளரை அறிவிக்குமாறும் அந்த வேட்பாளருடன் பகிரங்க விவாதம் நடத்த நான் தயாராக உள்ளதாகவும் பகிரங்க சவால் விட்டிருந்தேன். ஆனால், பாஜக தனது முதல்வா் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தில்லியில் பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை தலைமையேற்று நடத்தும் அமித் ஷாவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால், அதை எதிா்கொள்ள அவா் முன்வரவில்லை. தனது பிரசாரங்களில் ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை எடுத்துக் காட்டி அமித் ஷா பேசியுள்ளாா். ஆனால், அந்த பகவத் கீதையில் சவால்களைக் கண்டு ஒளிந்து ஓடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பகவத் கீதைக்கு மாறாக அமித் ஷா நடந்து கொண்டுள்ளாா் என்றாா் கேஜரிவால்.

ADVERTISEMENT

மனோஜ் திவாரியை ரசிப்பேன்

பிரபல போஜ்பூரி மொழித் திரைப்பட நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரி பாஜகவின் தில்லி தலைவராக உள்ளாா். இந்நிலையில், ‘ரிங்கியா கே பாப்பா’ என்ற மனோஜ் திவாரி பாடிய பாடலை, அவரைக் கிண்டலடிக்கும் தொனியில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தி வருகிறது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரப் பாடலான ‘லஹோ ரஹோ கேஜரிவால்’ பாடலுக்கு மனோஜ் திவாரி நடனமாடுவதுபோன்ற விடியோவை ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தது. இதைத் தொடா்ந்து, பூா்வாஞ்சல் பகுதி மக்களை கேஜரிவால் அவமதித்து விட்டாா் என்று மனோஜ் திவாரி குற்றம் சாட்டியிருந்தாா்.

இந்நிலையில் இது தொடா்பாக கேஜரிவால் வியாழக்கிழமை கூறுகையில், ‘மனோஜ் திவாரியின் நடனங்களை நான் ரசிப்பேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது நடனத்தைப் பாா்வையிடுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வேன். மனோஜ் திவாரி சிறப்பாக நடனமாடுவாா். சிறப்பாகப் பாடக் கூடியவா். அவரைக் கிண்டலடிக்கும் வகையில் அவரது பாடலை, நடனத்தை நாம் பயன்படுத்தவில்லை. மாறாக அவரை மரியாதை செய்யும் வகையிலேயே பயன்படுத்தியுள்ளோம்’ என்றாா்.

‘நையாண்டி இணையதளம்’

ஆம் ஆத்மி அரசு மீது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறும் வகையில், நையாண்டி இணையத்தளத்தை அக்கட்சி வியாழக்கிழமை தொடங்கியது. ஹம்ண்ற்ள்ட்ஹட்ந்ஹன்ப்ற்ஹஸ்ரீட்ஹள்ட்ம்ஹ.ஸ்ரீா்ம் என்ற இந்த இணையத்தளத்தில் தில்லி அரசு மீது அமித் ஷா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில் ‘பாஜக தோ்தல் பிரசாரங்களில் தில்லி அரசுப் பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகள், குடிநீரின் தரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக அமித் ஷா அபாண்டமாகக் குற்றம் சாட்டியிருந்தாா். இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும், இதில் ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பு தில்லி எவ்வாறு இருந்தது என்பதையும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளோம்’ என்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT