நாட்டு மக்களுக்கான பட்ஜெட் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி பாராட்டியுள்ளாா்.
பட்ஜெட்டில் உள்ள சாதகமான அம்சங்களைக் குறிப்பிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: வருமான வரியை எளிமைப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் பெருமளவில் பயனடைவாா்கள். மேலும், ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்றுள்ளாா் அவா்.