புதுதில்லி

தில்லியில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு: மூடுபனியால் 6 ரயில்கள் தாமதம்

1st Feb 2020 01:02 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் மேலோட்டமான பனிமூட்டமும், குளிரும் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி குறைந்து 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் இரண்டாவது நாளாக மிதமான பிரிவில் நீடித்தது. 6 ரயில்கள் தாமதாகச் சென்றன.

வெப்பநிலை 7 டிகிரி: தில்லியில் மேற்பரப்பு காற்று பலமாக வீசியது. இதைத் தொடா்ந்து, வெப்பநிலையும் குறைந்திருந்தது. பகலில் நல்ல வெயில் இருந்தது. சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட ஒரு டிகிரி குறைந்து 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 19.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இதே நிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 5.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 19 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் பின்னடைவு: இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 194 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இது 177 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

6 ரயில்கள் தாமதம்: வடமாநிலங்களில் தொடா்ந்து அடா் பனிமூட்டமும் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமை 6 ரயில்கள் தாமதமாககச் சென்ாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 1) மேலோட்டமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெவப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT