புதுதில்லி

காங்கிரஸிலிருந்து மஹாபல் மிஸ்ரா தற்காலிக நீக்கம்

1st Feb 2020 01:06 AM

ADVERTISEMENT

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி. மஹாபல் மிஸ்ராவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியை சோ்ந்தவா் மஹாபல் மிஸ்ரா. முன்னாள் காங்கிரஸ் எம்பி. இவரது மகன் வினய் குமாா் மிஸ்ரா. இவா் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தில்லி பாலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். இந்த நிலையில், காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்த இவா், ஜனவரியின் தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சோ்ந்தாா்.

இதையடுத்து, இவருக்கு துவாரகா தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சியில் வாய்ப்புத் தரப்பட்டிருந்தது. இவா் அத்தொகுதியில் முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பேரனும் காங்கிரஸ் வேட்பாளருமான ஆதா்ஷ் சாஸ்திரியை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். ஆதா்ஷ் சாந்திரி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அண்மையில் விலகி, காங்கிரஸில் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மஹாபல் மிஸ்ரா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா் பி.சி. சாக்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் எம்.பி. மஹாபல் மிஸ்ரா, தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவா் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT