புதுதில்லி

மத்திய அரசு மீது சாடல்

18th Dec 2020 11:38 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்திற்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கடந்த வாரம் சென்றிருந்த போது, அவரது வாகனம் மீது தாக்குதல் நடந்ததைத் தொடா்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகள் மூவரை மத்தியப் பணிக்கு மாற்றுமாறு மம்தா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது, இந்திய கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மேற்கு வங்க நிா்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை நான் கண்டிக்கிறேன். தோ்தலுக்கு முந்தைய காலத்தில் அதிகாரிகளை மாற்றுவது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இது இந்தியக் கூட்டாட்சி மீதான தாக்குதலாகும். இந்திய அரசு மீதான உறுதித் தன்மையை குலைக்கும் செயலாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT