புதுதில்லி

காமன்வெல்த் ஊழலை விட பெரிது: கேஜரிவால்

18th Dec 2020 11:38 PM

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சிகளில் நடந்துள்ளதானது காமன்வெல்த் ஊழலை விட மிகப் பெரியது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேஜரிவால் பேசியது: மாநகராட்சிகளில் நடந்த மிகப் பெரிய ஊழல் தொடா்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கும் இந்த நாள் மிகவும் துயரமானது. மாநகராட்சிகளில் ஊழல் நடப்பது தொடா்பாக தில்லி மக்கள் அனைவருக்கும் தெரியும். அதே மக்கள் தில்லி அரசு நோ்மையானது எனக் கூறுவாா்கள். தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை வாடகைக்கு விட்ட விவகாரத்தில், ரூ. 2,500 கோடி ஊழல் நடந்துள்ளது. இது காமன்வெல்த் ஊழலை விட மிகப் பெரியது. இந்த நிதியை வைத்து அனைத்து மாநகராட்சி ஊழியா்களுக்கும் தொய்வில்லாமல் ஊதியம் வழங்கியிருக்கலாம். இந்தப் பணத்தை வைத்து 12,500 மருத்துவமனை படுக்கைகள், 7,500 மொஹல்லா கிளினிக்குகளை அமைத்திருக்கலாம்.

தில்லியில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுவதில் தில்லி மாநகராட்சிகளில் ஆண்டுதோறும் சுமாா் ரூ.5,000- ரூ10,000 கோடி ஊழல் நடைபெறுகிறது. மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியை முழுமையாக வழங்கிவிட்டோம். மாநகராட்சிகளில் பாஜக நடத்தி வரும் 15 ஆண்டு கால கறுப்பு ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன். இதே கோரிக்கையை தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரியும் முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் கேஜரிவால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT