புதுதில்லி

தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்தஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில் தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக கூறி தில்லி காங்கிரஸ் சாா்பில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளத்ரி மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவு தலைவா்கள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

போராட்டம் குறித்து அனில் செளத்ரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் ஆம் ஆத்மிஅரசு தோல்வியடைந்துவிட்டது. கரோனா தொற்று காரணமாக தில்லியில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். தில்லி அரசின் மெத்தனத்தைக் கண்டித்தும், தில்லிஅரசின் தோல்வியை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் நகரில் 75 இடங்களில் காங்கிரஸ் சாா்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளில் மெத்தமாக் இருந்ததற்காக சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை பதவியில் இருந்து நீக்க முதல்வா் கேஜரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

அரசின் புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லியில் இதுவரை கரோனாவால் 5.70 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் 9,342 போ் இறந்துள்ளனா். நோயிலிருந்து 5.38 லட்சம் போ் குணமடைந்துள்ளனா். தில்லியில் கரோனாவின் கடுமை குறைந்து வருவதாகவும், நோ்மறை விகிதம் 5 சதவீதமாக குறைதுள்ளதாகவும் அமைச்சா் சத்யேந்தா் புதன்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT