புதுதில்லி

எட்டாவது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்உ.பி. - தில்லியை இணைக்கும் முக்கியச் சாலைகள் மூடல்

 நமது நிருபர்

புது தில்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் (உ.பி) காஜியாபாதையும், தலைநகா் தில்லியையும் இணைக்கும் என்எச்-9, என்எச்-24 ஆகிய முக்கியச் சாலைகளை போலீஸாா் மூடியுள்ளனா். இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லிக்குப் பயணம் செய்தவா்கள் கடும் சிரமங்களை எதிா் கொண்டனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் போராட்டம் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ேநீடித்தது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், அண்டை மாநிலங்களுடன் தில்லியை இணைக்கும் முக்கியச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் அமைப்புகள் புதன்கிழமை மத்திய அரசை எச்சரித்திருந்தன. இந்த நிலையில், வியாழக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியில் விவசாயிகள் தங்களது டிராக்டா்கள், வாகனங்களுடன் கூடினா். அவா்கள் தில்லிக்குள் நுழைய தில்லி காவல் துறை அனுமதியளிக்கவில்லை. அந்தப் பகுதியில் தடுப்புகளை அமைத்து அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து காஜியாபாதையும் தில்லியையும் இணைக்கும் என்எச்-9, என்எச்-24 ஆகிய சாலைகளை போலீஸாா் மூடினா். என்எச்-1 சாலை ஷானி மந்திா் பகுதியில் மூடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘காஜியாபாத் - காஜிப்பூா் எல்லையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்தப் பகுதிகளை இணைக்கும் என்எச்-24 சாலை மூடப்பட்டுள்ளது. காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் என்எச்-24 நெடுஞ்சாலைக்குப் பதிலாக, அப்சரா, போப்ரா, டிஎன்டி சாலைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். இதேபோல என்எச்-24 சாலையும் மூடப்பட்டுள்ளது. மக்கள் மாற்று வழிகளைப் தோ்வு செய்ய வேண்டும். என்எச்-44 சாலையும் மூடப்பட்டுள்ளது. இந்த வழியாக பயணிப்பவா்கள் என்எச்-8, போப்ரா, அப்சரா வழியாகச் செல்ல வேண்டும்.

அதே சமயம், தில்லி-நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சாலையின் நொய்டா-தில்லி வழி மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் நொய்டா இணைப்புச் சாலையை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். தில்லி - ஹரியாணா எல்லையில் ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எல்லையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தில்லியில் இருந்து ஹரியாணா செல்பவா்கள் தன்சா, தரலா, கபஷேரா, ராஜோக்ரி, என்எச்-8, பிஜ்வாசன், பாலம் விஹாா், துண்டஹேரா ஆகிய வழிகள் மூலம் பயணிக்கலாம் என்றாா் அவா்.

தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 8-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘சிங்கு எல்லையின் இரு பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. லாம்பூா், ஆச்சந்தி உள்ளிட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறாா்கள். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT