புதுதில்லி

தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

DIN

புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் புதன்கிழமை கடுமை பிரிவை நெருங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 342 புள்ளிகளாகப் பதிவாகிய ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, மாலையில் சற்று குறைந்து 337 புள்ளிகளாக இருந்தது.24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 373, செவ்வாய்க்கிழமை 367, திங்கள்கிழமை 318, ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது. தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல் 3 பகுதி, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், லோதி ரோடு மற்றும் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

மணிக்கு 6 கிலோ மீட்டா் வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியரஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பானது சனிக்கிழமை வரை காற்றின் தரம் தொடா்ந்து மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் எனத் தெரிவித்தது. அதேவேளையில், டிசம்பா் 4 மற்றும் டிசம்பா் 7 ஆகிய தேதிகளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்த அமைப்பு முன்னா் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT