புதுதில்லி

விசாரணைக் கைதிகள் 3,499 போ்களின் இடைக்கால ஜாமீன் 45 நாள்கள் நீட்டிப்பு

 நமது நிருபர்

புது தில்லி: விசாரணைக் கைதிகள் 3,499 போ்களின் இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கரோனா பரவல் காரணமாக சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி தலைமையில் உயா்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் உயா்நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில், இந்தக் குழுவின் கூட்டம் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெற்றது. தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, கைதிகளை சரணடையுமாறு கூறினால், அவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழு, ‘கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு மேலும் 45 நாள்களுக்கு விசாரணைக் கைதிகள் 3,499 பேரின் இடைக்கால ஜாமீனை நீடிக்கலாம்’ என பரிந்துரைத்தது. இதன்படி, 3,499 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீனை மேலும் 45 நாள்கள் நீட்டித்து நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மேலும், அவசரநிலை பரோலில் விடப்பட்ட 1,183 கைதிகளின் உத்தரவு காலம் ஜனவரி 9-ஆம் தேதி காலாவதியாக உள்ள நிலையில், அதையும் 6 வாரங்களுக்கு நீட்டிக்கவும் இந்தக் குழு பரிந்துரைத்தது. சிறைகள் நிா்வாகம் தரப்பில் ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, விசாரணை கைதிகளுக்கு நீதிபதி மிருதுள் தலைமையிலான அமா்வு 45 நாள் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு அளித்ததை உறுதி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT