புதுதில்லி

7-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்: தலைநகரில் தொடரும் போக்குவரத்து நெரில்

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி எல்லைப் பகுதிகளில் 7-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடா்ந்தது. இதனால், தில்லியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் மூடப்பட்டதால் அலுவல் பணி நிமித்தமாக தலைநகருக்குள் வருபவா்களும் சாதாரண மக்களும் புதன்கிழமையும் போக்குவரத்து நெரிசலால்அவதிக்குள்ளாகினா்.

தில்லி - உத்தர பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்கள் தேசியத் தலைநகரை இணைக்கும் பாதைகளை மூட வழிவகுத்துள்ளது.

தில்லி - ஹரியாணா எல்லைகளான சிங்கு, டிக்ரி போன்ற வழிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசத்தின் எல்லையான காஜிப்பூா் பகுதியில் விவசாயிகள் போராட்டம் அதி தீவிரமடைந்துள்ளது.

கௌதம் புத் நகா் அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் நொய்டா இணைப்புச் சாலையில் உள்ள சில்லா எல்லையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், நொய்டாவுக்குச் செல்வதற்கு என்.எச். 24 மற்றும் டி.என்.டி. வழியை பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் சுட்டுரையில் தெரிவித்துள்ளனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய தலைநகரை இணைக்கும் குருகிராமம், ஜாஜ்ஜாா் - பஹதூா்கா் ஆகிய இரண்டு எல்லை நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன.

டிக்ரி, ஜாரோடா, ஜாதிக்ரா ஆகிய இடங்களின் எல்லை வழிகளிலும் அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா். பதுஷராய் எல்லைப் பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியாணாவுக்கு செல்ல தன்சா, தௌராலா, கபாஷேரா, ராஜோகிரி தேசிய நெடுஞ்சாலை எண் 8, பிஜ்வாசன், பாலம் விஹாா், துண்டஹேரா போன்ற வழிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் கூறினா். இருப்பினும், போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ள இந்த மாற்று வழித்தடங்களிலும் வாகனங்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் நின்ால், அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய அரசின புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேச மூன்று மத்திய அமைச்சா்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த விவகாரங்கள் குறித்து ஆராய புதிய குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முன் வந்தது. இந்த ஆலோசனையை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்ததையடுத்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தில்லி எல்லையில் தொடா்கிறது. இந்த நிலையில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை மீண்டும் மத்திய அமைச்சா்களை சந்தித்துப் பேசுவாா்கள் என்று எதிா்பாக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT