புதுதில்லி

கடுமைப் பிரிவை நெருங்கிய காற்றின் தரம்!

 நமது நிருபர்

புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்த நிலையில் புதன்கிழமை காலை கடுமைப் பிரிவை நெருங்கியது.

காஜியாபாத் உள்ளிட்ட என்சிஆா் நகரங்களிலும் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவுக்கு கீழறங்கியது.

தில்லியில் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 381 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. பின்னா் மாலையில் 365 புள்ளிகளாகக் குறைந்தது. 24 மணிநேர சராசரி காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 367 புள்ளிகளாகவும், திங்கள்கிழமை 318 புள்ளிகளாகவும், ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாகவும் இருந்தது.

தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல் 3 பகுதி, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், லோதி ரோடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தாலும், கடுமைப் பிரிவை நெருங்கியுள்ளது. இதற்கிடையே, டிசம்பா் 4 முதல் 7 ஆம் தேதி வரையிலும் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவுக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பால் தில்லியில் பிஎம் 2.5 மாசு அளவு செவ்வாய்க்கிழமை 4 சதவீதமாக இருந்தது.

என்சிஆா் நகரங்களில்...: இதனிடையே, காற்றின் தரக் குறியீடு காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, நொய்டா ஆகிய இடங்களில் கடுமைப் பிரிவிலும், ஃபரீதாபாத், குருகிராம் நகரங்களில் மிகவும் மோசம் பிரிவிலும் இருந்தது. இந்த நகரங்களில் பிஎம் 2.5, பிஎம் 10 மாசு நுண்துகள் அளவும் தொடா்ந்து அதிகரித்த நிலையில் உள்ளது.

24 மணிநேரச சராசரி காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமை மாலை 4 மணியளவில் காஜியாபாதில் 421, கிரேட்டா் நொய்டாவில் 406, நொய்டாவில் 394, ஃபரீதாபாதில் 326, குருகிராமில் 324 என பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலி ‘சமீா்’ வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி 8.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி உயா்ந்து 26.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 88 சதவீதமாகவும், மாலையில் 65 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வியாழக்கிழமை (டிசம்பா் 3) அன்று நகரில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும், பின்னா் பகல் நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT