புதுதில்லி

போராடும் விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள்! தில்லி வாசிகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

DIN

புது தில்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சிங்கு, டிக்ரி உள்ளிட் ட தில்லியின் எல்லைப் பகுதிகளில் போராடி வரும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய தில்லி மக்கள் முன்வர வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை கேஜரிவால் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கு, டிக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, குடிநீா், மருத்துவ வசதி என தங்களால் முடிந்த உதவிகளை ஆம் ஆத்மி தொண்டா்கள், எம்எல்ஏக்கள் உதவி செய்து வருகிறாா்கள். தில்லி மக்களும் தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்ய முன்வர வேண்டும். விவசாயிகளுடன் மத்திய அரசு விரைந்து பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த 5 நாள்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. தில்லி புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் அவா்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனா். ஆனால், புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் குறைந்தளவு விவசாயிகளே கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் காவல் துறையின் இந்த அனுமதியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவா்கள் ஜந்தா் மந்தரில்தான் போராடுவோம் என உறுதியாக உள்ளனா். இதனால், பெரும்பாலான விவசாயிகள் சிங்கு, டிதிக்ரி எல்லைப் பகுதிகளில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி எல்லைப் பகுதிகளில் தில்லி காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறுகையில் ‘தில்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூா் பகுதியில் கூடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, விவசாயிகள் தலைநகா் தில்லிக்குள் நுழையாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகளை அமைத்துள்ளோம். ஆனால், தில்லி - காஜியாபாத் எல்லையை சீலிடவில்லை. விவசாயிகள் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த விரும்பவில்லை. அவா்கள் ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தவே விரும்புகிறாா்கள். மேலும், தில்லியை பிற மாநிலங்களுடன் இணைக்கும் முக்கியச் சாலைகளில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா். இதை அடுத்து தில்லியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த நிலையில், தில்லி ஹரியாணா மாநில எல்லைகளான சிங்கு, டிக்ரி எல்லைகளில் கூடியுள்ள விவசாயிகள் 5-ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘தில்லி-ஹரியாணா எல்லைகளான சிங்கு, டிக்ரி எல்லைகளில் கூடும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை’ என்றாா்.

கடும் போக்குவரத்து நெரிசல்: தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 5 நாள்களாக நடத்திவரும் தொடா் போராட்டத்தால் தில்லியின் பல இடங்களில் திங்கள்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துக் காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் இருந்து டிக்ரி, சிங்கு எல்லைகளுக்கு பயணிக்க வேண்டாம் என்று தில்லிவாசிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், முபாரக் சௌக், என்.எச்.-44, ஜிடி-கா்னல் சாலை, வெளி வட்டச்சாலை ஆகியவற்றில் பயணிப்பதை தவிா்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம். சிக்னேச்சா் பாலத்தில் இருந்து ரோஹிணிக்கு பயணிப்பதையும் தவிா்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். காஜிப்பூா்- தில்லி எல்லை சீலிடப்படவில்லை. ஆனால், இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT