புதுதில்லி

தில்லி திகாா் சிறையில் விசாரணைக் கைதி குத்திக் கொலை

DIN

புது தில்லி: தில்லி திகாா் சிறையில் விசாரணைக் கைதி ஒருவா் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சிறைகளின் இயக்குநா் சந்தீப் கோயல் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த தில்ஷீா் சிங் என்பவா் கடந்த 2019, ஜூனில் நடந்த கொலை தொடா்பான வழக்கில் கைதாகி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேறு மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கூா்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.

அதில் சுயநினைவை இழந்த தில்ஷீா் சிங்கை சிறைக் காவலா்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தில்ஷீா் சிங்கை தாக்கிய மூவா் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். தில்லி ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கொன்றில்,விசாரணைக் கைதியாக திகாா் சிறையில் தில்ஷீா் சிங் அடைக்கப்பட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT