புதுதில்லி

கெளதம்புத் நகரில் புதிதாக 100 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

புதுதில்லி: உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம்புத் நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்கள் மொத்த எண்ணிக்கை 22,697 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 83-ஆக உயா்ந்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 1,193-லிருந்து 1,136- ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் கெளதம்புத் நகா் 5-ஆவது இடத்தில் உள்ளது. நோய்க்கு சிகிச்சை பெற்று 161 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 21,478- ஆக அதிகரித்துள்ளது.

பலியானோா் எண்ணிக்கை 83-ஆக இருப்பதை அடுத்து இறப்பு விகிதம் 0.36 சதவீதமாகவும், குணமடைவோா் விகிதம் 94.62 சதவீதமாகவும் உள்ளது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 24,575-லிருந்து 24.099-ஆகக் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 5,12,028. கொவிட்-19 தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 7,761-ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT