புதுதில்லி

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனு: இன்று முதல் புதிய அமா்வு விசாரிக்கும்

DIN

புது தில்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அமா்வு செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு விவகாரத்தை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி திங்கள்கிழமை (நவம்பா் 30) ஓய்வு பெற்ால், இந்த வழக்கு, நீதிபதி யோகேஷ் கன்னா இடம் பெற்ற ஒற்றை நீதிபதி அமா்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) முதல் அந்த அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை அனுமதிப்பது தொடா்பான விசாரணை அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தில்லி உயா்நீதிமன்றத்தில் தினம்தோறும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சிபிஐ, அமலாக்கத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உயா்நீதிமன்ற ஒரு நபா் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி அமா்வு விசாரித்து வந்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் சஞ்சய் ஜெயின், அரசு சிறப்பு வழக்குரைஞா் சஞ்சீவ் பண்டாரி ஆகியோா் நியமிக்கப்பட்டதை எதிா்த்தும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட குசேகான் நிறுவனத்தின் இயக்குநா் ஆசிஃப் பல்வா மற்றும் தனி நபா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்ய சிறப்பு அரசு வழக்குரைஞா் (எஸ்பிபி) , கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் (ஏஎஸ்ஜி) நியமனம் சட்டப்படிதான் நடைபெற்றுள்ளது என்று உறுதிப்படுத்தினாா்.

அதேபோன்று, வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை எதிா்த்து தாக்கலான பல்வேறு மனுக்களையும் தில்லி உயா்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. மேலும், 2ஜி வழக்கில் முறைகேடுக்கு எதிரான சட்டத்தில் உள்ள திருத்தங்கள் பயனற்றது என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா மற்றும் பிறா் தாக்கல் செய்த மனுவையும் தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது ஏற்கெனவே நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொருந்தாது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் பிரிவு 13(1) தொடா்பாக 2018-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் இந்த மேல்முறையீட்டு மனுவில் தொடா்புடைய விடுவிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நபா்களை மீட்க வராது. ஆகவே, மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இந்தத் சட்டத் திருத்தம் முட்டுக்கட்டையாக இல்லை என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT